உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாமளாபுரம் நொய்யல் பாலம் சீராகுமா?

சாமளாபுரம் நொய்யல் பாலம் சீராகுமா?

திருப்பூர்; சாமளாபுரம் நொய்யல் ஆற்றின் குறுக்கில் உள்ள பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி, பாலத்தில் நாற்று நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் - கோவை மாவட்ட எல்லையாக நொய்யல் ஆறு அமைந்துள் ளது. ஆற்றின் குறுக்கில், சாமளாபுரம் மற்றும் சோமனுாரை இணைக்கும் வகையில் உயர் மட்டப்பாலம் உள்ளது.இரு மாவட்டங்களை இணைக்கும் முக்கியமான ரோடாக இந்த பாலம் அமைந்துள்ளது. இப்பாலம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது.இந்த பாலம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை காரணம்பேட்டையிலும், கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையை கருமத்தம்பட்டியிலும் இணைக்கும் ரோட்டில் அமைந்துள்ளது.விசைத்தறி தொழில் நகராக உள்ளதால், சோமனுார் - சாமளாபுரம் இடையே உள்ள சரக்கு வாகனப் போக்குவரத்து; மாவட்டங்களை இணைக்கும் பாலம் என்பதால் பெருமளவு மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் இதைப் பயன்படுத்துகின்றன.நீண்ட காலமான நிலையில் பாலம் மீதுள்ள ரோடு மிகவும் சேதமடைந்து, பாலத்தின் மேற்புறம் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது, லேசான அதிர்வும் ஏற்படுகிறது. தெரு விளக்குகளும் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.நாற்று நடும்போராட்டம்சாமளாபுரம் நொய்யல் பாலத்தை சீராக்க வலியுறுத்தி, அதிகாரிகள் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாலத்தில் உள்ள குழிகளில் இன்று காலை 11:00 மணிக்கு நாற்று நட்டு போராட்டம் நடத்தப் போவதாக நொய்யல் பாதுகாப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !