உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமா?

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமா?

திருப்பூர் : திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பழனிசாமி அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றோர் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், https://mudhalvarmarundhagam.tn.gov.in/ என்கிற தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும். வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டியது அவசியம்.மருந்தகம் அமைக்க 110 சதுர அடிக்கும் குறையாத சொந்த அல்லது வாடகை இடம் இருக்கவேண்டும். சொந்த இடும் என்றால் அதற்கான சொத்துவரி, குடிநீர் வரி, மின் இணைப்பு ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று; வாடகை கட்டடம் எனில், கட்டட உரிமையாளரிடம் ஒப்பந்த பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு, அரசு மானியம் 3 லட்சம் ரூபாய் இரண்டு தவணைகளில், ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். கூடுதல் நிதி தேவைப்பட்டால், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும்.பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ), தாட்கோ, டாம்கோ பயனாளிகளும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து, முதல் தவணை மானிய தொகை 1.50 லட்சம் ரூபாய் விடுவிக்கப்படும்.ரேக்குகள், பிரிட்ஜ், ஏ.சி., மருந்துகள் வைப்படற்கான பெட்டி ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தியபின், இரண்டாவது தவணை மானியம் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில் மருந்துகள் வழங்கப்படும். மருந்தகங்களுக்கு, விற்பனைக்கு ஏற்ப ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ