உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் வினியோகம் சீராகுமா?

குடிநீர் வினியோகம் சீராகுமா?

திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ், முதல் மண்டல உதவி கமிஷனரிடம் கொடுத்த மனு:மாநகராட்சி 25வது வார்டு பகுதியில் உள்ள சோளிபாளையம், சீனிவாசா நகர், பாட்டையப்பா நகர், லோட்டஸ் கார்டன், வெங்கடேஸ்வரா நகர், பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர், ஆனந்தா அவென்யூ, விநாயகப்பா நகர், ஐஸ்வர்யா கேட், ஆராதனா விலாஸ், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குடிநீருக்காக அப்பகுதி பொது மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே குடிநீர் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்க நடவடிக்கை தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை