உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சொட்டு நீர் பாசன திட்ட மானியத்தில் முறைகேடு?

சொட்டு நீர் பாசன திட்ட மானியத்தில் முறைகேடு?

சேவூர்; விவசாய நிலத்துக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பதில் மானியம் பெறுவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து நிறுவன அதிகாரிகள் சேவூரில் விவசாய நிலத்தில் ஆய்வு நடத்தினர்.அவிநாசி ஒன்றியம், சேவூரை சேர்ந்தவர் ஞானப் பிரகாசம், விவசாயி. இவர் தனது, 2.25 ஏக்கர் பரப்பில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு சொட்டு நீர் பாசனம் ஏற்படுத்த திட்டமிட்டார்.உபகரணங்கள் பெற சேவூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் விண்ணப்பித்தார். அரசு அங்கீகரித்த சொட்டு நீர்பாசன உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் ஏஜன்சியாக இந்த நிறுவனம் உள்ளது.கடந்த, 2022ல், அந் நிறுவனம் இவரது தோட்டத்தில் அளவீடு செய்து, சொட்டு நீர் பாசன உபகரணங்கள் கொண்டு வந்து பொருத்தியது. இதற்கான திட்ட மதிப்பீடு 1.43 லட்சம் ரூபாய் எனக் கணக்கிட்டு அதற்கான மானியம் 1.24 லட்சம் ரூபாய் கழித்து மீதம், 19 ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தினார்.ஆனால், அளவீடு செய்ததன் அடிப்படையில் முழுமையாக உபகரணங்கள் பொருத்தப்படவில்லை. தொடர்ந்து வலியுறுத்தியும் நிறுவனம் எதையும் வழங்கவில்லை.அதன்பின், வேறு வழியின்றி, 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அவர் வெளியிடத்தில் வாங்கிப் பொருத்தினர். அதன்பின் அந்நிறுவனம், முழுமையாக உபகரணங்கள் பொருத்தியதாக கணக்கிட்டு, அரசிடமிருந்து 1.65 லட்சம் ரூபாய் மானியம் பெறும் வகையில் ஆவணங்களை தயார் செய்து, ஞானப்பிரகாசத்தை கையொப்பம் கேட்டுள்ளது. ஆனால், அவர் கையொப்பம் இட மறுத்து, முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார்.அதன்பேரில், நேற்று வேளாண் துறை அலுவலர்கள் ஞானப்பிரகாசத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். கோவையிலிருந்து அந்நிறுவன அலுவலர் இளையராஜா நேரில் வந்து ஆய்வு செய்தார். இது குறித்து உரிய அறிக்கை தயார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.இது குறித்து, ஞானப்பிரகாசம் கூறுகையில், ''மானிய தொகை பெறுவதில் முறைகேடு நடப்பதாகத் தெரிகிறது. நான் செலவிட்ட தொகையை கணக்கில் எடுத்து அதை மானியம் பெற விண்ணப்பிக்கும் நிறுவனம், கடந்த 3 ஆண்டாக இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று வரை கூட அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி