மேலும் செய்திகள்
பைக் மோதி மூதாட்டி பலி
06-Sep-2025
அவிநாசி: அவிநாசி, கால்நடை மருத்துவமனை அருகே சாலையப்பாளையம் செல்லும் வழியில் உள்ள டிரான்ஸ்பார்மரில், நேற்று பெண் மயில் ஒன்று மோதி பலியானது. சாலையப்பாளையம் குட்டை பகுதியில் இருந்து நல்லாறு நீர் வழித்தடத்தில் பல மாதங்களாக மழை நீர் நிரம்பியுள்ளதால் ஏராளமான பறவைகள் இரை தேடி வந்து செல்கின்றது. அதில் நேற்று அருகில் உள்ள தோட்டத்து பகுதியில் இருந்து பறந்து வந்த பெண் மயில் டிரான்ஸ்பார்மரில் மோதியதில் பலியானது. அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் வனத்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் இறந்த மயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றார். அதன்பின், அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மயில் அடக்கம் செய்யப்பட்டது.
06-Sep-2025