உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எப்போதும் இது ஒரு தொடர்கதை

எப்போதும் இது ஒரு தொடர்கதை

திருப்பூர் : 'பிரதான சாலையோரங்களில் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் விபத்தும், அதனால் உயிரிழிப்பும் ஏற்படுகிறது' என, பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.அதிவேக பயணம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, டூவீலர்களில் ெஹல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்றவை தான், சாலை விபத்துக்கு முக்கிய காரணம், என்கின்றனர் போலீசார். இதில், சாலையை மறைத்து வைக்கப்படும் 'பிளக்ஸ் பேனர்'கள் வாகன விபத்துக்கு காரணமாகி விடுகிறது.பிரதான சாலைகளின் வளைவு பகுதிகளில் வைக்கப்படும் 'பிளக்ஸ் பேனர்'களால் ஒருபுறம் வரும் வாகனங்களுக்கு, எதிர்புறம் வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை; சாலையோரங்களில் 'பிளக்ஸ் பேனர்' வைத்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது; குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டுமானால் உரிய அனுமதி பெற வேண்டும்' என, போலீசார் அறிவுறுத்தியும் அத்தகைய செயல்கள் தொடர்கின்றன.கணியாம்பூண்டி வளர்ச்சிக்குழு தலைவர் ரஹீம் அங்குராஜ், மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கிய மனுவில்,'சாலையோரங்களில் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால், விபத்து நடப்பதை பல நேரங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது. கணியாம்பூண்டி பிரதான சாலையில் உள்ள ஒரு பேக்கரி முன், எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அதுதொடர்பான பிளக்ஸ் பேனர், சாலையை மறைத்து வைக்கப்படுகிறது.இதுபோன்று ஊரக சாலைகளின் பல இடங்களில் 'பிளக்ஸ் பேனர்'கள் வைக்கப்பட்டிருக்கின்றன; போலீசார் உரிய கவனம் செலுத்தி, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ