ஜெய் ஸ்ரீராம் அகாடமி 100 சதவீத தேர்ச்சி
திருப்பூர்; ஜெய்ஸ்ரீராம் அகாடமி பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளது.திருப்பூர் அருகே அவிநாசிபாளையம், ஜெய் ஸ்ரீ ராம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2வில், நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இப்பள்ளியில், தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும், 70 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.பள்ளி அளவில், 600க்கு 587 மதிப்பெண் பெற்று, சுசிதா முதலிடம், 585 மதிப்பெண் பெற்று காவியா, சங்கமித்ரா ஆகியோர் இரண்டாமிடம், 581 மதிப்பெண் பெற்று சம்ரிதி மூன்றாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வில் அசத்திய மாணவ, மாணவியரை, ஜெய்ஸ்ரீராம் அகாடமி தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் முத்து அருண் உள்ளிட்டோர் இனிப்பு, பரிசு வழங்கி பாராட்டினர். பள்ளி முதல்வர்கள் கலைச்செல்வி, யமுனாதேவி, நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் பாராட்டினர்.