மேலும் செய்திகள்
காவலர் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 50 பேர் மனு
02-Apr-2025
திருப்பூர்: தமிழகம் முழுவதும் ஜமாபந்திக்கான ஏற்பாடு குறித்த விவரங்களை அனுப்புமாறு, வருவாய்த் துறை கமிஷனர், கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் அனைத்து மாவட்டங்களிலும், தாலுகா பகுதிகளில் வருவாய் கிராமங்கள் அடிப்படையில் வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.பொதுமக்களை பங்கேற்கச் செய்யும் வகையில், கோரிக்கை மனுக்கள் பெறுதல்; வருவாய் துறை சார்பிலான திட்ட உதவிகள் வழங்கல் உள்ளிட்டவை நடத்தப்படும். இந்தாண்டு ஜமாபந்தி நடத்துவது குறித்து வருவாய்த் துறை கமிஷனர், மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.''ஜமாபந்தியில் பங்கேற்கும் வருவாய்த்துறை அலுவலர், பிற துறை அலுவலர் பெயர்கள்; நடக்கும் தேதி, நாள் இடம் உள்ளிட்ட விவரம் கெஜட்டில் வெளியிட வேண்டும். குறைந்த பட்சம் 15 நாள் முன்னதாக பொதுமக்களுக்கு இந்த தகவல் சென்று சேர வேண்டும். உரிய வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.நில வருவாய் உள்ளிட்டவற்றில் முரண்பாடு இல்லாத வகையில் முழுமையாக கணக்குகள் சரி பார்க்க வேண்டும். பெறப்படும் மனுக்கள், தீர்வு, நிராகரிப்பு குறித்த முழு விவ ரம் வழங்க வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அவற்றின் மீது தீர்வு எடுக்க வேண்டும். உரிய தகவல் மனுதாரருக்கு வழங்க வேண்டும். தவறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயிகளுடன் கூட்டம் நடத்தி குறைகள் கேட்டறிய வேண்டும். விவசாயம் மேம்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கலெக்டர்கள் ஜமாபந்தி ஏற்பாடுகளை துவங்கி அதன் விவரங்களை கமிஷனருக்கு அனுப்ப தயாராகி வருகின்றனர்.
02-Apr-2025