உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஜம்புக்கல் மலை பிரச்னை; தீவிரமடையும் போராட்டம்

 ஜம்புக்கல் மலை பிரச்னை; தீவிரமடையும் போராட்டம்

உடுமலை: உடுமலை அருகே, ஜம்புக்கல் மலையை மீட்க வலியுறுத்தி, 8வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடுமலை அருகேயுள்ள, ஆண்டியகவுண்டனுாரில் உள்ள ஜம்புக்கல் மலைத்தொடரை, தனியார் ஆக்கிரமித்து, மரங்களை வெட்டியும், பாறைகளை உடைத்தும் பசுமையான மலையை அழித்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான மலையை காப்பாற்ற, அரசு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கனரக வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். போலி ஆவணங்கள் வாயிலாக ஏழை விவசாயிகளுக்கு வழங்கிய கண்டிசன் பட்டாவை, முறைகேடாக மாற்றி, விற்பனை நடந்தது குறித்தும், விவசாயிகளின் நிலத்தை அபகரித்தவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், போராட்டம் நடக்கிறது. கடந்த, 10ம் தேதி மலையடிவாரத்தில் துவங்கிய, தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று, 8வது நாளாக நடந்தது. போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், 'ஜம்புக்கல் மலையை காக்க அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாரமாக போராட்டம் நடக்கும் நிலையில், அரசு தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதே நிலை தொடர்ந்தால், சட்டசபை தேர்தலில் விவசாயிகள் ஒருமித்த முடிவு எடுக்க நேரிடும்,' என, எச்சரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kumaran
டிச 18, 2025 08:09

நாடு முழுவதும் இந்த அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பு அடங்கவில்லை இப்படி பொறுப்பற்றவர்களிடம் பொறுப்பை கொடுத்த மக்கள் ஒருபுறம் என்றால் இயற்கை வளங்களை அழிக்கும் கொள்ளையர்களுக்கு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முட்டு கொடுக்கும் மூடர்களே நாம் இயற்கையை அழித்தோம் நாமது வழித்தோன்றல்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் மழைப்பொழிவு இருக்காது பல்லுயிர் பெருக்கம் இருக்காது ஆகவே பொது மக்களாகிய நாம் எதிர்ப்போம். தவறுகளை யார் செய்தாலும் தவறு என்று துணிவுடன் சொல்வோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை