ஜெய்சாரதா மெட்ரிக் மாணவர்கள் அபாரம்
திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வில், திருப்பூர் ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளி மாணவியர் கிரிஜா, தவஸ்ரீ, வைஷிகா ஆகியோர் தலா, 592 மதிப்பெண் பெற்று முதலிடம். தீவிஷா, விஷால், தலா, 591 மதிப்பெண் இரண்டாமிடம். பாலாஜி, ஏலுாரி கவுதம் பாலாஜி, தலா, 588 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம்.விகாசினி, திவாகர், விஷால் ஆகியோர் மூன்று பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளியில், மொத்தம், ஐந்து மாணவர்கள், 590 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர்.கணினி பயன்பாடு தேர்வில், 22 பேரும், கணினி அறிவியல் - 19, பொருளியல் - 6, கணக்குப்பதிவியல் - 6, கணிதம் - 4, வணிகவியல்- 4, வேதியியல் - 4, இயற்பியல், உயிரியியல் ஆகிய பாடங்களில், தலா ஒருவரும் சதமடித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம் பாடத்தில், பல மாணவர்கள், 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.ஜே.இ.இ., முதன்மை தேர்வில் மாணவர் பாலாஜி தேசிய அளவில் சிறப்பிடம் பெற்று என்.ஐ.டி.,க்கு தேர்வாகி உள்ளார். மேலும் ஐ.ஐ.டி.,க்கான முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளார். பள்ளியில், 155 மாணவர்கள்,500 க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவர், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, பள்ளியின் பொருளாளர் சுருதிஹரீஷ், பள்ளி முதல்வர் மணி மலர் உட்பட பலர் பங்கேற்றனர்.