உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரிதன்யாவின் தற்கொலைக்கு நீதி; மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரிதன்யாவின் தற்கொலைக்கு நீதி; மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அவிநாசி; திருமணமான இரண்டு மாதத்தில் வரதட்சணை மற்றும் கணவரி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் செல்வி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சித்ரா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் லட்சுமி, ஷகிலா, செயலாளர் பானுமதி, துணை செயலாளர் சரஸ்வதி, தலைவர் பவித்ராதேவி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று, ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டுமென கோஷமிட்டனர்.ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவியை உடனடியாக கைது செய்ய வேண்டும், கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்து அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும், இவ்வழக்கில், எந்தவித அரசியல் தலையிடும் இருக்கக் கூடாது என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட மாதர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை