உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அலகுமலையில் கந்த சஷ்டி

அலகுமலையில் கந்த சஷ்டி

அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை கந்தர் சஷ்டி விழா மகா கணபதி யாக வழிபாட்டுடன் ஆஞ்சநேயர் வளாகம் சண்முகம் மஹாலில் நடக்கிறது. யாக பூஜை, கந்த சஷ்டி விரதம் துவக்கும் பக்தர்களுக்கு காப்பு அணிவித்தல், மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. வரும் 23ம் தேதி முதல் யாக பூஜை, மகா தீபாராதனை, ஸ்ரீ கந்தர் அனுபூதி பாராயணம் நடக்கிறது. வரும், 27ல் ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி கோவிலில் சக்தி வேல் வாங்குதல், மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹாரம், சம்ஹார மூர்த்திக்கு சாந்தாபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் கங்கணம் அவிழ்த்து விரதத்தை நிறைவு செய்கின்றனர். 28ல் திருமங்கல்யதாரணம், திருக்கல்யாணம், மகா தீபாராதனை, மகா தரிசனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ