மேலும் செய்திகள்
இந்தியன் ரேஸிங் விழா 2025 நிறைவு
06-Oct-2025
உடுமலை: உடுமலை அருகே காங்கேயம் இன மயிலை காளை, தமிழகத்திலேயே அதிகபட்சமாக, 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மருள்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஹரிவீரராகவன், காளைகள் வளர்த்து, ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். சில நாட்களுக்கு முன், பொள்ளாச்சி நெகமம், செட்டிக்காபாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில், குறைந்த நேரத்தில் இலக்கை கடந்து, முதல் பரிசை வென்ற, காங்கேயம் இனத்தை சேர்ந்த மயிலை காளை, உச்ச விலையாக, 30 லட்சத்து, 2,000 ரூபாய்க்கு விற்பனையானது. சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில், ரேக்ளா பந்தய காளை ஒன்று, அதிகபட்சமாக, 22 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது உடுமலை காளை, அதிக விலைக்கு விற்பனையானது. நெகமம் செட்டிக்காபாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜா, இந்த காளையை வாங்கியுள்ளார். ரேக்ளா பந்தய வரலாற்றில், அதிக விலைக்கு உடுமலை காளை விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஹரிவீரராகவன் கூறுகையில், ''சில நாட்களுக்கு முன், நெகமம் செட்டிக்காபாளையம் பகுதியில் நடந்த, மாநில அளவிலான ரேக்ளா பந்தயத்தில், மயிலை காளை, 200 மீட்டர் பந்தய துாரத்தை, 16.125 வினாடிகளில் கடந்து, முதல் பரிசை பெற்றது. இதனால், இந்த காளை அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது,'' என்றார்.
06-Oct-2025