காங்கேயம் தொழில்நுட்பக் கல்லுாரி; விமேக் அகாடமியுடன் ஒப்பந்தம்
திருப்பூர்; காங்கேயம் தொழில்நுட்பக் கல்லுாரியின் இயந்திரப் பொறியியல் துறை - கோவை விமேக் அகாடமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம், தொழில் சார்ந்த பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு, இயந்திரப் பொறியியல் துறை தலைவர் சோமசுந்தரம் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ராமகுமார் வாழ்த்துரை வழங்கினார். விமேக் அகாடமி தலைமைச் செயல் அதிகாரி சரவணன் பேசினார். காங்கேயம் தொழில்நுட்பக் கல்லுாரி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி மகேந்திர கவுடா சிறப்புரையாற்றினார்.