கராத்தே திறனாய்வு தேர்வு மங்கலம்; கதிரவன் பள்ளி அபாரம்
திருப்பூர்; கராத்தே மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு மங்கலம் கதிரவன் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, 75 மாணவர்கள் பங்கேற்றனர். அடுத்த சான்றிதழ் மற்றும் அடுத்த நிலைக்கான பெல்ட் பெற்றனர். தேர்வினை கியோஷி முரளிதரன் தலைமையில் ஹரிஹரசுதன் மேற்பார்வையில் பயிற்சி ஆசிரியர்கள் விஷ்ணு மற்றும் செல்வகுமார் நடத்தினர். பங்கேற்ற அனைவரையும் பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி முதல்வர் பாராட்டினார்.