வாசகர்கள் கருத்துகள் ( 1 )
anonymous
ஜூன் 04, 2025 23:20
நாட்டில் திருஷ்டி பொம்மையை நடு ரோட்டில் உடைக்கப் பட்டுள்ளது.
திருப்பூர்; மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.பல்வேறு கிளைகளிலும் நிர்வாகிகள் நலத்திட்ட உதவி வழங்குதல், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்திருந்தனர். திருப்பூர் கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் சாமிநாதன் தலைமையிலும், மத்திய மாவட்ட பகுதியில் செல்வராஜ், வடக்கு மாவட்டத்தில் தினேஷ்குமார் மற்றும் தெற்கு மாவட்டத்தில் பத்மநாபன் ஆகியோர் தலைமையிலும் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட அலுவலகங்களில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
நாட்டில் திருஷ்டி பொம்மையை நடு ரோட்டில் உடைக்கப் பட்டுள்ளது.