உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கவர மகாஜன சங்க நிர்வாகிகள் தேர்வு

கவர மகாஜன சங்க நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர்; திருப்பூர் கவர மகாஜன சங்கம் (நாயுடு சங்கம்) அவசர பொதுக்குழு, 2026, 2027 மற்றும், 2028ம் ஆண்டுக்கான நிர்வாகக்குழு, செயற்குழு, பதவியேற்பு விழா, குலாலர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.தலைவராக திருநாவுக்கரசு, துணைத்தலைவர்களாக, சிவக்குமார், உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி, முத்துசாமி, ரேவதி, பொது செயலாளராக, குமார், இணை செயலாளர்களாக, ரவிக்குமார், வரதராஜ், சேதுராம், அமைப்பு செயலாளராக குருசாமி, பொருளாளராக துரைராஜ் மற்றும் 13 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமண உதவித்தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்குவது; பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மேற்படிப்பு செல்வோருக்கு உதவுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக,மறைந்த உறுப்பினர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ