உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கு கு.க., முகாம்

அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கு கு.க., முகாம்

திருப்பூர்; மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் கவுரி அறிக்கை: ஆண்களுக்கான, நவீன குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம், 19ம் தேதி, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடக்கிறது. சிறந்த நிபுணர்களை கொண்டு, 10 நிமிடங்களில், இலவசமாக, கத்தியின்றி, ரத்தமின்றி, பக்கவிளைவுகள் இல்லாமல், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். இதனால், கடின உழைப்புக்கோ, இல்லற மகிழ்ச்சிக்கோ தடையில்லை. அரசு ஊக்கத்தொகையாக, 1,100 ரூபாயும், கலெக்டர் வழங்கும் ஊக்கத்தொகையாக, 1,000 ரூபாய், காந்திநகர் ரோட்டரி வழங்கும் ஊக்கத்தொகை 1,000 என, 3,100 ரூபாய், அறுவை சிகிச்சை செய்து கொண்டவருக்கு வழங்கப்படும். விவரங்களுக்கு, 99422 59775, 95977 30813 என்ற எண்களில் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி