உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீசரண் மெடிக்கல் சென்டரில் சிறுநீரகப் பரிசோதனை முகாம்

ஸ்ரீசரண் மெடிக்கல் சென்டரில் சிறுநீரகப் பரிசோதனை முகாம்

திருப்பூர்; திருப்பூர், போயம்பாளையத்தில் உள்ள ஸ்ரீசரண் மெடிக்கல் சென்டரில் இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் கடந்த 18ல் துவங்கியது; நாளை(23ம் தேதி) வரை நடக்கிறது. சிறுநீரக சிறப்பு மருத்துவர் டாக்டர் பூபாலன் பங்கேற்று, இலவச ஆலோசனைகளை வழங்கி பரிசோதனைகளை மேற்கொள்கிறார். ரத்த சர்க்கரை அளவு, யூரியா, கிரியாட்டின், சிறுநீர் பரிசோதனை போன்றவை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. யூரின் பிசிஆர், ஏசிஆர், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், யூரிக் ஆசிட் போன்ற பரிசோதனைகளை 50 சதவீத சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளலாம். முழுநேர சிறுநீரக சிறப்பு மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பழனிசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ