10ம் வகுப்பு தேர்வில் சாதித்த கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி
திருப்பூர : திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 2024 - 25ம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ்1 பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் மதிப்பெண் பெற்றும், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றும் சாதனை படைத்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 494 மதிப்பெண்களுடன் அபிராமி முதலிடம், 492 மதிப்பெண்ணுடன் அஸ்விதா இரண்டாமிடம்; 491 மதிப்பெண்ணுடன் ஸ்ரீதர்ஷினி மூன்றாமிடம் பெற்று, மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.பிளஸ் 1 தேர்வில், 591 மதிப்பெண்ணுடன் அனுஷ்யா முதலிடம்; 588 மதிப்பெண்ணுடன் வெர்ஷனா இரண்டாமிடம்; 586 மதிப்பெண்ணுடன் ரிதுமிகா மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 6 பேர் தமிழில் 99 மதிப்பெண், கணிதத்தில் 4 பேரும், அறிவியலில் 3 பேர், சமூக அறிவியலில் 7 என, மொத்தம் 14 பேர் சென்டம் பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்வில், தமிழ், கணிதம், கணக்குப்பதிவியலில் தலா 1, கணினி அறிவியல், இயற்பியல், கணினி பயன்பாடு பாடங்களில் தலா 3 பேர் வணிகவியலில், 5 பேர் என, மொத்தம் 17 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவ, மாணவியரை, கிட்ஸ் கிளப் பள்ளியின் தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி, செயலாளர் நிவேதிகா, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ் ஆகியோர் பாராட்டினர்.