உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தடகள சங்கம் நடத்தும் கிட்ஸ் ஒலிம்பிக் போட்டி

தடகள சங்கம் நடத்தும் கிட்ஸ் ஒலிம்பிக் போட்டி

திருப்பூர்; திருப்பூர் தடகள சங்கம் சார்பில் குழந்தைகளுக்கான கிட்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தடகள சங்கம், சார்பில் வரும் 30ம் தேதி, உடுமலை, அரசு கலைக்கல்லுாரியில், உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்களுக்கான, 4வது ஆண்டு கிட்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. அன்று காலை 8:45 மணிக்கு போட்டிகள் துவங்கும். இதில் 6, 8, 10, 12 மற்றும் 14 வயது பிரிவுகளில் சிறுவர்கள் பங்கேற்கலாம். போட்டிகளில் கலந்து கொள்ள கட்டணம் எதுவுமில்லை. வெற்றி பெறுவோருக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க 86677 99305 மற்றும் 75981 82133 எண்களில் தொடர்பு கொள்ளலாம் வரும் 26ம் தேதி மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும், என திருப்பூர் தடகள சங்கம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ