உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழலையருக்கு பட்டமளிப்பு விழா

மழலையருக்கு பட்டமளிப்பு விழா

உடுமலை; உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவில் பள்ளி முதல்வர் மாலா துவக்கி வைத்தார். உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவன தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நல மருத்துவர் கனி அமுதன் மழலையருக்கு பட்டங்களை வழங்கினார்.தொடர்ந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை