உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கே.எம்.சி., பப்ளிக் பள்ளி ஆண்டு விழா கோலாகலம்

கே.எம்.சி., பப்ளிக் பள்ளி ஆண்டு விழா கோலாகலம்

திருப்பூர்; திருப்பூர், பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில், 17ம் ஆண்டு விழா, கோலகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, பள்ளி தாளாளர் மனோகரன் தலைமை வகித்தார். பள்ளி தலைவர்கள் சண்முகம், லோகநாயகி முன்னிலை வகித்தனர். திருப்பூர் ரோட்டரி மாவட்ட கவர்னர் தனசேகர், பட்டி மன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். அதில், மாணவர்கள் புதுமைகளை கண்டுபிடிக்க உற்சாகத்துடன் செயல்பட வேண்டும். தனித்திறன் மற்றும் தன்னம்பிக்கை கொண்டு வளர வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அறத்தோடு வாழ கற்று கொடுங்கள். கல்வியானது ஆளுமை திறனையும், தனித்திறனையும் வளர்க்க வல்லது என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தி, ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் சின்னசாமி, ராமநாதன், அந்தோணிசாமி, அஷ்வின் சந்திரகுமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு சி.பி.எஸ்.இ., பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா மற்றும் தலைமை ஆசிரியை பிரேமலதா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை