உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பின்னலாடை நிறுவனங்கள் 8 நாட்கள் விடுமுறை

பின்னலாடை நிறுவனங்கள் 8 நாட்கள் விடுமுறை

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் சார்ந்துள்ள 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று துவங்கி 19ம் தேதி வரை, எட்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பின்னலாடை நிறுவனங்கள், நிட்டிங், சாய ஆலைகள், பிரின்டிங், எம்பிராய்டரிங் உட்பட, அனைத்து தொழிற்சாலைகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சம்பளம் பெற்ற கையுடன், தேவையான 'பர்ச்சேஸ்' செய்துவிட்டு, நேற்றே சொந்த ஊரை நோக்கி தொழிலாளர் பலரும் குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றனர். வரும் 20ம் தேதி வேலைக்கு செல்ல ஏதுவாக, 19ம் தேதி திருப்பூர் திரும்பும் திட்டத்துடன் புறப்பட்டு சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை