மேலும் செய்திகள்
சபரிமலைக்கு சிறப்பு ரயில்
15-Nov-2024
வரும், 20 மற்றும் 27ம் தேதிகளில், கொல்லம் - காக்கிநாடா சிறப்பு ரயில் (எண்:07174) இயக்கப் படுகிறது. காலை, 8:40க்கு கொல்லத்தில் புறப்படும் ரயில் மறுநாள் மாலை 4:00 மணிக்கு காக்கிநாடா சென்று சேரும்; இந்த ரயில் திருப்பூருக்கு, மாலை, 5:30க்கு வரும். மறுமார்க்கமாக, வரும், 18 மற்றும், 25ம் தேதி காக்கிநாடாவில் இருந்து இரவு, 11:50க்கு புறப்படும் ரயில், மூன்றாவது நாள் மாலை, 5:30க்கு கொல்லம் சென்று சேரும். இந்த ரயில், திருப்பூரை இரவு, 9:13 மணிக்கு கடக்கும். சபரிமலை பக்தர்கள் இந்த ரயிலைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
15-Nov-2024