உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொங்கணகிரி தேரோட்டம்

கொங்கணகிரி தேரோட்டம்

திருப்பூர் : திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரியில் ஸ்ரீ கந்த பெருமான் கோவில் உள்ளது. தைப்பூச தேரோட்ட விழா நாளை மாலை 3:30 மணி முதல் நடக்கிறது. முன்னதாக கந்த பெருமானுக்கு மஹா அபிஷேகம், 4:00 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெறும். 4:15 மணிக்கு தேர் வடம் பிடித்தல், 5:30 மணிக்கு தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பவானி, தக்கார் சபரீஸ்குமார், மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ