உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கே.ஆர்.சி., விஸ்பெரிங் வில்லா; அவிநாசியில் நாளை திறப்பு விழா

கே.ஆர்.சி., விஸ்பெரிங் வில்லா; அவிநாசியில் நாளை திறப்பு விழா

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், நாளை கே.ஆர்.சி., விஸ்பெரிங் வில்லா திறப்பு விழா செய்யப்படுகிறது. இது குறித்து, கேஆர்.சி., ஹவுசிங் இன்ப்ரா ஸ்ட்ரெச்சர் நிறுவனத்தினர் கூறியதாவது:எங்கள் நிறுவனத்தின் 'புதிய மார்டன் டவுன் ஹப்' பில், 38 ஏக்கர் பரப்பில், 500க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள், அவிநாசி என்.எச்., 47 மற்றும் செந்துார் மஹால் அருகில், அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த ஆர்கிடெக் ரோகித் மெரோல் மற்றும் ஆர்கிடெக் மகேஷ் ஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளனர். 24 மணி நேரம் குடிநீர், 4 ஏக்கர் பரப்பளவில் பூங்கா, மைதானம், கூடைப்பந்து, கிரிக்கெட் மைதானம், மருத்துவ வசதி, பசுமை சூழல், டிபார்ட்மென்ட் ஸ்டோர், நிலத்தடி மின் கேபிள், பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.ஐ.டி., நிறுவன ஊழியர்கள் அதிக ஆர்வத்துடன் வீட்டுமனைகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை