உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உலக நலனுக்காக அவதரித்தவர் கிருஷ்ணர்

உலக நலனுக்காக அவதரித்தவர் கிருஷ்ணர்

பல்லடம்; 'உலக நலனுக்காக அவதித்தவர் கிருஷ்ணர்,' என, பல்லடம் அருகே நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அறிவுறுத்தப்பட்டது. பல்லடம் அடுத்த, மகாலட்சுமி நகரில், ஹரே கிருஷ்ணா பக்தி யோகா மைய திறப்பு விழா மற்றும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா ஆகியவை நடந்தன. இதில், ஹரே கிருஷ்ணா பக்தி யோகா மையத்தின் ஸ்தாபக ஆச்சாரியர் சுவாமி பிரபுபாதா பேசியதாவது: சரீரங்கள் மாறிக்கொண்டே இருந்தாலும், ஆத்மா ஒன்றே என்பதை உணர வேண்டும். தாய், தந்தை, தாத்தா, பாட்டி என, அனைத்தும் நானே என்கிறார் இறைவன். அப்படிப்பட்ட இறைவன், நமக்குத் தெரியும்படியாக இவ்வுலகில் அவதரிக்கிறார். அவ்வாறு, அனைத்து உயிர்களின் நலனுக்காக இறைவன் கிருஷ்ணராக அவதரித்தார். அதுதான் ஜென்மாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. கடவுளை விட்டு மனிதராக இங்கு ஜென்மம் எடுத்த நாளை பிறந்தநாளாகக் கொண்டாடுவது சிறப்பானது கிடையாது. முக்தி அடையும் நாள்தான் சிறந்தது. இந்த உலகில் இருந்து நமக்கு விடுதலை கொடுக்கவே கடவுள் இங்கு அவதரிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, காலை, 8.00 மணி முதல் ஹரி நாமசங்கீர்த்தனம், பக்தி இன்னிசை, மகா கலசாபிஷேகம் மற்றும் ஹரே கிருஷ்ணா பக்தி யோகா மையத் திறப்பு விழா ஆகியவை நடந்தன. தொடர்ந்து, குழந்தை களின் கலை நிகழ்ச்சிகள், மாறுவேட போட்டிகளும், அதனை தொடர்ந்து, அபிஷேக பூஜைகள், தீபாராதனை ஆகியவை நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !