உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடனடி செயல்பாடு; போலீசாருக்கு பாராட்டு

உடனடி செயல்பாடு; போலீசாருக்கு பாராட்டு

திருப்பூர் : காலேஜ் ரோடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணியளவில் வேலை முடிந்து பைக்கில் திரும்பிய இருவரை ஒரு கும்பல் மறித்து மொபைல் போன்களை பறித்து தப்பியது.இது குறித்து அணைப்பாளையம் போலீஸ் ெசக் போஸ்ட்டில் இருந்த போலீஸ்காரர் சங்கர்பாபுவிடம் தெரிவித்தனர். உடனடியாக இரவு ரோந்து போலீஸ்காரர் பாலு முனியாண்டிக்குத் தகவல் அளிக்கப்பட்டது.களம் இறங்கிய அவர், இதில் ஈடுபட்ட சஞ்சய், 20 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்.l திருப்பூர் தெற்கு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் வீட்டிலிருந்து காணாமல் போனார். அவரை, நல்லுார் எஸ்.ஐ., தங்கவேல், முத்தணம்பாளையம் பகுதியில் அந்நபரைக் கண்டுபிடித்து அழைத்து வந்தார். இவ்விரு சம்பவங்களிலும் விரைந்து பணியாற்றிய போலீசார் இருவரையும், மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி நேரில் அழைத்து பாராட்டி ரொக்கப்பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை