உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராக்காத்தம்மன் கோவிலுக்கு அடுத்தாண்டு கும்பாபிேஷகம்

ராக்காத்தம்மன் கோவிலுக்கு அடுத்தாண்டு கும்பாபிேஷகம்

அவிநாசி : அவிநாசி, சேவூர் ரோட்டில், 300 ஆண்டுகள் பழமையான ராக்காத்தம்மன் கோவில் உள்ளது.கோவிலை இடமாற்றம் செய்து நேரு வீதியில் புதிதாக கட்டுவதற்கு கடந்த மார்ச் 29ம் தேதி கால்கோள் விழா நடந்தது. தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கோவில் கும்பாபிஷேக விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் வரும் 2025 பிப்ரவரி 16ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிப்., 14ம் தேதி காலை கணபதி ஹோமம், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த கலசம் கொண்டு வருதல் மற்றும் முதல் கால பூஜையும் 15ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !