ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
திருப்பூர்,; திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீஅய்யப்பன் கோவில் கும்பாபிேஷகம், நாளை (2ம் தேதி), சபரிமலை தந்திரிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.திருப்பூர், வாலிபாளையத்தில் பஜனை மடம் இயங்கி வந்த நிலையில், அய்யப்ப பக்தர்கள் முயற்சியால், காலேஜ் ரோட்டில் நிலம் வாங்கி, ஸ்ரீஅய்யப்பன் கோவில் கட்டப்பட்டது. இதுவரை, நான்கு முறை கும்பாபிேஷகம் நடந்துள்ளது; தற்போது, ஐந்தாவது கும்பாபிேஷக விழா விமரிசையாக நடந்து வருகிறது. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீபத்ரகாளியம்மன், ஸ்ரீமஞ்சமாதா, நவகிரஹம் ஆகிய பரிவார தெய்வங்களுடன், பஞ்சலோக சிலை வடிவாக அய்யப்ப சுவாமி அருள்பாலிக்கிறார்.கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த 27ம் தேதி துவங்கியது; தினமும், காலை மற்றும் மாலை என, இரண்டு வேளையும் யாகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது. நாளை (2ம் தேதி) காலை, 6:10 மணி முதல், 7:10 மணிக்குள் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.தொடர்ந்து, 3ம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு பிரதிஷ்டா உச்சபூஜை, பெரியபலிகள், அதிவாசம், அத்தாழ பூஜைகள் நடைபெற உள்ளன. 4ம் தேதி அதிகாலை, பெரியபலிக்கல் பிரதிஷ்டா பூஜையும், அய்யப்ப சுவாமிக்கு 25 கலச பூஜை அபிேஷகமும், ஸ்ரீபூதாபலி பூஜையும், தொடர்ந்து மண்டல பூஜையும் நடைபெற உள்ளது. காலேஜ் ரோடு சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில், அன்னதானம் நடைபெறும். கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை, ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஅய்யப்ப பக்த ஜனசங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.