உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் வரும் 29ல் கும்பாபிேஷகம்

ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் வரும் 29ல் கும்பாபிேஷகம்

திருப்பூர்; அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையம் ஆர்.எஸ்., முருகம் பாளையத்திலுள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (26ம் தேதி) காலை, 7:00 மணிக்கு, கணபதி யாகத்துடன் துவங்குகிறது; காலை, 8:00 மணிக்கு காப்பு கட்டப்பட்டு, முளைப்பாலிகை ஊர்வலம்; 10:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை; மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. வரும் 27ம் தேதி காலை, 9:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, விநாயகர் சதுர்த்தி, யாகசாலை பிரவேசம், கோபுர விமான கலசங்கள் நிறுவப்படுகிறது. மதியம், 3:00 மணிக்கு, கிழக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் ஊர்வலம் வருகிறது; மாலை, 5:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெறும். வரும் 28ம் தேதி, காலை, 8:00 மணிக்கு ஐந்தாம் கால பூஜைகள்; மாலை, 5:00 மணிக்கு ஆறாம் கால பூஜைகள் நடைபெறுகின்றன. வரும் 29 ம் தேதி காலை, 5:00 மணிக்கு ஏழாம் கால பூஜையுடன் துவங்கும் விழாவில், காலை, 6:45 மணிக்கு கிழக்கு பிள்ளையார் கோவில்; தொடர்ந்து, எல்லை பிள்ளையார்; காலை, 9:15 மணிக்கு மேற்கு பிள்ளையார் கோபுரம், ஸ்ரீ மாகாளியம்மன் கோபுரம்; காலை, 10:00 மணிக்கு ஸ்ரீ மாகாளியம்மன் கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு, 8:00 மணிக்கு, அம்மன் மலர் அலங்கார ஊர்வலம் நடக்கிறது. தினமும் இரவு சிறப்பு மேடை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை