உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோதா சமேத ரங்கநாதசாமி கோவிலில் வரும் 20ம் தேதி கும்பாபிேஷகம்

கோதா சமேத ரங்கநாதசாமி கோவிலில் வரும் 20ம் தேதி கும்பாபிேஷகம்

உடுமலை: குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், கோதா சமேத ஸ்ரீரங்கநாதசாமி கோவில் கும்பாபிேஷக விழா வரும் 20ம் தேதி நடக்கிறது. உடுமலை அருகே குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது. இக்கோவிலில், ரங்கநாதர் சுவாமிகள், ராமானுஜர், சுப்ரமணியசுவாமிகள் புதிதாக அமைக்கப்பட்டு, கோதா சமேத ரங்கநாத சுவாமி கோவில் கும்பாபிேஷகம் 20ம் தேதி நடக்கிறது. கும்பாபிேஷக விழா வரும் 18ம் தேதி துவங்குகிறது. அன்று காலை மகா சுதர்சன ேஹாமம் நடக்கிறது. தொடர்ந்து மாலையில் புண்யாகவாசனம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. வரும் 19ம் தேதி முதற்கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. 20ம்தேதி காலையில் மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. அன்று காலை, 9:00 மணிக்கு சுவாமிகளின் கும்பாபிேஷகம் நடக்கிறது. கும்பாபிேஷகத்தையொட்டி பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ