மேலும் செய்திகள்
கோயில்களில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் பரவசம்
05-Sep-2025
உடுமலை,; உடுமலை அருகே, புங்கமுத்துார் கரிச்சிக்குமாரசாமி, செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது. உடுமலை அருகே புங்கமுத்துார் கரிச்சிக்குமாரசாமி, செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிேஷகத்தையொட்டி மூன்று நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தது. முதல் இரண்டு நாட்களில் விளக்கு பூஜை, 108 மூலிகை திரவிய ேஹாமம், கோ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனைகளும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு சுவாமிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
05-Sep-2025