பீச்வாலிபால் போட்டி குமுதா பள்ளி சாதனை
திருப்பூர்: தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டியில், நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.இந்தியப் பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 68வது தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள், ஒடிசா மாநிலம், புரி கடற்கரையில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலிருந்தும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழக அணியில் 17 வயது மாணவர் பிரிவில், திருப்பூர் குமுதா மெட்ரிக் பள்ளி மாணவர் சந்தோஷ், மாணவியர் பிரிவில் யோகிஸ்ரீ மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பங்கேற்று விளையாடினர்.இவர்கள் பங்கேற்ற அணி தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலாளர் அரவிந்தன், இணை செயலாளர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.