உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொலை வழக்கில் தொடர்பு; ஆசாமி மீது குண்டாஸ்

கொலை வழக்கில் தொடர்பு; ஆசாமி மீது குண்டாஸ்

திருப்பூர் : கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன், 23. இவர் தனது தோழியின் போட்டோவை மொபைல் போனில் பதிவு செய்திருந்தார். இவருக்கு தெரியாமல், நண்பர்கள் போட்டோவை பகிர்ந்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டினர்.கடந்த ஜூலை 3ம் தேதி இதுதொடர்பாக எழுந்த பிரச்னையில், புவனேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில், பத்துக்கும் மேற்பட்டோரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஆத்துப்பாளையத்தை சேர்ந்த செல்லதுரை, 39 என்பவரை குண்டாசில் கைது செய்ய கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார். தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். இதுவரை மாநகரில், 91 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை