உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் லட்சார்ச்சனை

ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் லட்சார்ச்சனை

அவிநாசி; திருமுருகன்பூண்டி ஸ்ரீஅய்யப்ப சேவா அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவிலில் 14ம் ஆண்டு லட்சார்ச்சனை, மண்டல பூஜை மற்றும் ஸ்ரீ சாய்பாபா கும்பாபிஷேக விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருமுருகநாதர் கோவிலில் இருந்து பால்குடம், தீர்த்த குடங்கள் எடுத்து ஊர்வலமாக அய்யப்பன் கோவிலுக்கு வந்தனர். ஸ்ரீ தர்மசாஸ்தாவிற்கு கலசாபிஷேகம், தீர்த்தாபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை, மண்டல பூஜைகள் நடந்தன. வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில், அவிநாசி ஸ்ரீ சாய் பாபா மந்திர் ரவி கார்த்திக் வெங்கட் முன்னிலையில் ஸ்ரீ சாய் பாபாவிற்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கிருபாகர சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார்.கோவில் நிர்வாகம் மற்றும் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கோபாலன்
டிச 16, 2024 05:55

தர்ம சாஸ்தாவிற்கு லட்சார்ச்சனை என்று தலைப்பு தந்து விட்டு சாய் பாபா படத்தை போட்டால் என்ன அர்த்தம்.அதேபோல் கோயம்புத்தூர் கோட்டம் என்று தலைப்பு தந்து விட்டு அனைத்து செய்திகளும் திருப்பூர் மாவட்டம் தொடர்பானவை.?


சமீபத்திய செய்தி