உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானியத்தில் விளக்குப்பொறி விவசாயிகள் எதிர்பார்ப்பு

மானியத்தில் விளக்குப்பொறி விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருப்பூர் : விவசாயிகளுக்கு பெரிய சவாலாக மாறியிருப்பது பூச்சித்தாக்குதல். இயற்கையான முறையில் பூச்சிகளை அழிப்பதற்காக தோட்டக்கலைத்துறை சார்பில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில், விளக்குப்பொறி, மஞ்சள் ஒட்டுப்பொறி ஆகியவை வழங்கப்பட்டன.விளக்குப்பொறியை, மாலை நேரம் பயன்படுத்தினால், பூச்சிகள் அழியும். பொறி, தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கும் தன்மை கொண்டது.ஒரு தாய் அந்துப்பூச்சியை பிடிப்பதால், அதனால் உற்பத்தியாகும் 300 பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். விளக்கு பொறிகளை, ஒரு எக்டருக்கு இரண்டு மட்டும் பயன்படுத்தினால் போதும்.இதேபோல், வெள்ளை ஈ, இலைப்பேன், இலைதுளைப்பான், தத்துப்பூச்சி போன்றவற்றை அழிக்க, மஞ்சள் நிற ஒட்டுப்பொறி வைக்கலாம். பயிர் காலம் முழுவதும், ஏக்கருக்கு 12 பொறிகளை வைத்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.விவசாயிகள் கூறுகையில், 'தோட்டக்கலைத்துறை சார்பில், பூச்சிகளை கட்டுப்படுத்தும் பொறிகள் வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் மானியத்தில் வழங்கப்பட்டன.விளக்குப்பொறிக்கு, 1,200 ரூபாய் செலுத்தினால் போதும். மஞ்சள் நிற ஒட்டுப்பொறியும், அதிகம் பயன்படுத்தப்பட்டது. இந்த நிதியாண்டில் இவை மானியத்தில் வழங்கப்படவில்லை. வரும் நிதியாண்டில், மீண்டும் மானியத்துடன் வழங்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !