உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வேல் வழிபாட்டு வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

 வேல் வழிபாட்டு வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலை: உடுமலை அருகே போடிபட்டியில் நடந்த வேல் வழிபாட்டு வைபவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். உடுமலை முருக பக்தர்கள் மற்றும் வேல் வழிபாட்டு மன்றம் சார்பில், நேற்று போடிபட்டியில், வேல் வழிபாட்டு வைபவம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை மங்கள இசையுடன் வேல் எடுத்து வரப்பட்டது. காலை, 9:05 மணி முதல் வேல் வழிபாடு நடந்தது. காலை, 10:01 மணி முதல் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இந்த வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ