மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
11-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் அருகிலுள்ள பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியன சார்பில், மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலக மேற்பார்வையாளர் தினேஷ் பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில், பள்ளி மாணவர்களுக்கு, குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும், குழந்தைகள் உதவி மைய எண் '1098' குறித்து விளக்கப்பட்டது. சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள், மூன்றாம் பாலினத்தோர் குறித்த விழிப்புணர்வு, சமூக வலைதளங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெங்கடேஷ் விளக்கம் அளித்தார். முகாமில், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஒருங்கிணைப்பாளர் சிராஜூதீன் நன்றி கூறினார்.
11-Oct-2025