எலுமிச்சைவிலை சரிவு
திருப்பூர்: எலுமிச்சை வரத்து இயல்பாக இருந்தாலும், விற்பனை சுறுசுறுப்பாக இருந்ததால், கடந்த மாதம் விலை உயர்ந்தது.கிலோ, 160 முதல், 180 ரூபாய்க்கு விற்றது. ஒரு பழம், ஆறு முதல், ஏழு ரூபாய்க்கு விற்றது. டிச., துவக்கம் முதல் எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளது.உள்ளூரில் இரண்டாவது சீசன் துவங்கிய நிலையில், ஆந்திராவில் இருந்தும் எலுமிச்சை வர துவங்கியுள்ளதால், தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு, மூன்று டன் வந்து குவிகிறது.இரவு, அதிகாலை குளிர் காரணமாக எலுமிச்சை விற்பனை மந்தமாகியுள்ளது. இச்சூழலில் வரத்து அதிகமாகி வருவதால், விலை குறைந்துள்ளது.நேற்று ஒரு கிலோ எலுமிச்சை, 90 முதல், 110 ரூபாய்க்கும், ஒரு பழம், நான்கு முதல், ஐந்து ரூபாய்க்கும் விற்றது.