உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பையில் துர்நாற்றம் தடுக்க லெமன் ஸ்பிரே

 குப்பையில் துர்நாற்றம் தடுக்க லெமன் ஸ்பிரே

திருப்பூர்: திருப்பூரில் தினமும் சராசரியாக 800 மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. பாறைக்குழிகளில் இவற்றைக் கொட்ட எதிர்ப்பு எழுந்தது. வழக்கும் தொடரப்பட்டது. இதனால், கிடைத்த இடத்தில் எல்லாம் மாநகரில் குப்பைகளை கொட்டிக் குவிக்கும் நிலை காணப்படுகிறது. பல நாட்களாக தேங்கியுள்ள குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் துயரப்படுகின்றனர். காற்றில் பறந்து செல்லும் கழிவுகள் ரோட்டோர சாக்கடை கால்வாய் மற்றும் மழை நீர் வடிகால்களிலும் சென்று விழுந்து கிடக்கிறது. அவற்றை அகற்றும் பணிகளும் நடக்கின்றன. துர்நாற்றம் வீசும் குப்பைக்குவியல்களில், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், 'லெமன் ஸ்பிரே' எனப்படும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி