உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூச்சிகளை கட்டுப்படுத்த விளக்கு பொறி அமைப்பு

பூச்சிகளை கட்டுப்படுத்த விளக்கு பொறி அமைப்பு

உடுமலை,; தர்பூசணி சாகுபடியில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்பட்ட நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, விளக்கு பொறிகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக கோடை சீசனை இலக்காக வைத்து தர்பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.விளைநிலங்களில் மேட்டுப்பாத்தி, சொட்டு நீர் பாசனம் அமைத்து, நிலப்போர்வை தொழில்நுட்பத்தை பின்பற்றுகின்றனர். தற்போது, சின்னவீரம்பட்டி, தாந்தோனி உள்ளிட்ட பல பகுதிகளில், இச்சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.பருவமழைக்குப்பிறகு, தர்பூசணி சாகுபடியில், நோய்த்தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், விளைநிலங்களில், விளக்குப்பொறி வைத்து கட்டுப்படுத்தும் முறையை, விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'தரமான தர்பூசணி பழங்கள் உற்பத்திக்கு நோய்த்தாக்குதலை குறித்த நேரத்தில், கட்டுப்படுத்துவது அவசியம். ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டை குறைக்கும் வகையில், விளக்குப்பொறி வைத்து, பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிக்கும் முறையை பின்பற்றுகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ