உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அஞ்சல் துறை பெயரில் லிங்க்; பணம் பறிக்க பலே திட்டம்

அஞ்சல் துறை பெயரில் லிங்க்; பணம் பறிக்க பலே திட்டம்

திருப்பூர்: ஆன்லைனில் புத்தகம் ஆர்டர் செய்தவரை, அஞ்சல் துறை பெயரில் லிங்க் அனுப்பி பணம் பறிக்க நடந்த முயற்சி 'அதிர்ஷ்டவசமாக' தோல்வியடைந்தது.திருப்பூரை சேர்ந்த கண்ணன் என்பவர், மனைவி பெயரில் ஆன்லைன் வாயிலாக சில புத்தகங்கள் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு 'வாட்ஸ் ஆப்' வாயிலாக வந்த தகவலில், 'முகவரி தெளிவாக இல்லை; அதனை உறுதிப்படுத்தி, பார்சலை முறையாக டெலிவரி செய்ய கட்டணம் செலுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.'இந்தியா போஸ்ட்' என்ற பெயரில் வந்துள்ள தகவலில் இடம் பெற்ற லிங்க்கில், பணம் அனுப்ப முயற்சித்த போது, அதில் யு.எஸ்., டாலர் என்ற மதிப்பில் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது. தனது வங்கி கணக்கிலிருந்து அந்த லிங்க்கில் பணம் அனுப்ப முயன்ற போது, டாலர் மதிப்பு என்பதாலும், குறிப்பிட்ட தொகைக்கு மேல் அனுப்ப முடியாது என்பதாலும், அந்த பரிமாற்றம் வங்கி தரப்பில் நிறுத்தப்பட்டது.கண்ணன் கூறுகையில், ''புத்தகம் ஆர்டர் செய்த இ-மெயில் முகவரி மற்றும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இந்த தகவல் வந்தது. இந்தியா போஸ்ட் என்ற பெயரில் இருந்ததால் நாம் ஆர்டர் செய்தது தான் என்று சந்தேகப்படாமல் லிங்க்கில் பணம் அனுப்ப முயன்றேன். பின்னர்தான், இது மோசடி என்பது தெரியவந்தது. ஆனால், வங்கி பரிவர்த்தனை 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செய்ய முடியாது என்பதால், ஏறத்தாழ 84 ஆயிரம் ரூபாய் பணம் தப்பியது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

NATARAJ P
செப் 22, 2024 08:26

போஸ்ட்டாபிஸ் மூலம் V P P. ல் புத்தகங்கள் நிறுவனத்தை அனுப்பசொல்லி போஸ்ட்மேன் அ அர்களிடம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்


Neelachandran
செப் 21, 2024 10:32

டெலிவரி செய்யும் அஞ்சலகம் அங்கு பணத்தைக்கட்டச் சொல்லுமே தவிர ஆன்லயனில் கட்டச் சொல்லாது.பொது அறிவோடு விழிப்புடன் இருங்கள்


M. S. P. Sekar Gowri
செப் 21, 2024 10:24

O.k.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை