உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடை சந்தை வரத்து குறைந்தது

கால்நடை சந்தை வரத்து குறைந்தது

திருப்பூர்: இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று கூடிய, சந்தைக்கு கால்நடை வரத்து குறைந்தது; விற்பனையும் மந்தமாகியது. வழக்கமாக திங்கள்தோறும் கோவில்வழி அடுத்த அமராவதி பாளையத்தில் கால்நடை சந்தை நடைபெறும். இன்று, தீபாவளி பண்டிகை என்பதால், ஒரு நாள் முன்பாக நேற்று சந்தை கூடியது. வழக்கமாக, 650 - 750 கால்நடைகள் வரும் நேற்று, 461 கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன. கன்றுகுட்டிகள், 3,000 - 4,000 ரூபாய்; காளை, 29 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய், மாடுகள், 31 ஆயிரம் - 35 ஆயிரம் ரூபாய், எருமை, 25 ஆயிரம் - 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரத்தை விட வரத்து குறைந்த நிலையில், விற்பனையும் குறைவாகவே இருந்தது. 90 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !