உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு திட்டத்தில் கடன் உதவி

தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு திட்டத்தில் கடன் உதவி

உடுமலை; திருப்பூர் மாவட்டத்திலுள்ள, குறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள், தமிழக அரசு கடன் உதவி திட்டத்தில் தாய்கோ வங்கியில் கடன் பெறலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கி வரும், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) வாயிலாக, மாநில அரசு கலைஞர் கடன் உதவி திட்டம், குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள, குறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள், இத்திட்டத்தின் கீழ், எளிய நடைமுறைகளில், 7 சதவீதம் வட்டி விகிதத்தில், ரூ. 20 லட்சம் வரை, கடன் பெறலாம்.புதிய மற்றும் விரிவாக்கம் செய்யும் குறு உற்பத்தி நிறுவனங்கள் நிறுவனத்தின் கட்டடம் கட்டுதல், இயந்திரங்கள் கொள்முதல் மற்றும் நடைமுறை மூலதனத்திற்கும் கடன் பெறலாம்.தகுதியின் அடிப்படையில், மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்களிலும் பயன் பெறலாம்.மேலும் விபரங்களுக்கு, 89255 34025; 89255 34024 மற்றும், 94874 80914 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !