உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மலை கிராம பெண்களுக்கு தொழில் துவங்க கடனுதவி

மலை கிராம பெண்களுக்கு தொழில் துவங்க கடனுதவி

உடுமலை; கோடந்துார் மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, தொழில் துவங்க, வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சி உடுமலையில் நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட, கோடந்துார் மலைவாழ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக, 6 மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவக்கப்பட்டது. அக்குழுவினருக்கு, மாநில ஊரக வாழ்வதார இயக்கத்தின் கீழ் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. அதன்பின், குழுக்களுக்கு தர மதிப்பீடு செய்து, வங்கிக்கடனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. உடுமலையில் நடந்த நிகழ்ச்சியில், மகளிர் திட்ட வட்டார மேலாளர் பத்மபிரியா தலைமை வகித்தார். பாங்க் ஆப் இந்தியா மேலாளர் ஸ்ரீராமன் முன்னிலை வகித்தார். மேலும், 6 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, தொழில் துவங்க, 18 லட்ச ரூபாய் வங்கிக்கடன் வழங்கப்பட்டது. ஊரக வாழ்வாதார இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், பாங்க் ஆப் இந்தியா துணை மேலாளர்கள் லோகேஷ், சினில்ராஜ், மலைவாழ் கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ