உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கோல் வைத்து பூஜை

சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கோல் வைத்து பூஜை

காங்கயம்: காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் வைக்கோல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. சிவன்மலை கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு,நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இருப்பு சங்கிலி, ருத்தரட்சம், இரு இளநீர்கள் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி முதல் திருவோட்டில் விபூதி ருத்ராட்சம் திருப்புழ் புத்தகம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்நத சபாபதி(65) என்ற பக்தரின் கனவில் வைக்கோல் வைக்க உத்திரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கோல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.இது பற்றி கோவில் சிவாச்சாரியார் ஒருவர் கூறியதாவது: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதே அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். வைக்கோல் வைத்துள்ளதால், தீவனம் சம்பந்தமாக நிகழ்வு நடக்கும் என்று புரிந்து கொள்ளலாம். இதன் தாக்கம் போக போக தான் தெரியவரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
பிப் 26, 2025 15:36

எந்தப் பொருளை வேணும்னாலும் வெச்சுப்பாருங்க. அதன் தாக்கம்னு ரீல் உடலாம்.


saravanan
பிப் 26, 2025 14:52

வைக்கோல் குறிப்பது எதை? வெறும் தீவனம் மட்டும் தானா என்ன? வைக்கோல் போராகிறது, கயிறாகிறது மேலும் கூரையாகவும் வேயப்படுகிறதே இவையாவும் வைக்கோலின் பயன்பாடுகள். ஆக வைக்கோல் வந்ததன் உண்மையான கருத்தியல் என்னவாக இருக்க முடியும்? நெற் சாகுபடியில் நாற்று பயிராகி, நெற்கதிராகி களத்தில் போரடித்து முடிவில் வைக்கோலாகிறது அதாவது அறுவடை எனும் பலன் தந்தமைக்கு பிறகான கட்டம் ஆக வைக்கோல் குறிப்பது நாட்டிற்கு நன்மை செய்த பெரியவர்களால் மீண்டும் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு என்பதே பிரதமர் மோடி போன்ற நல்ல தலைவர்களால் நம்நாடு உலகளவில் தொடர்ந்து உயரும் என்றும் புரிந்து கொள்ளலாம்.


Kasimani Baskaran
பிப் 26, 2025 06:40

வேலெடுத்து வித்தை காட்டியவர்களை முருகன் வைத்து செய்வதை எப்படி வெளியே சொல்ல முடியும்...


Mani . V
பிப் 26, 2025 05:57

இதை வைத்து சிலர் பிழைப்பு நடத்துவதாகத்தான் தெரிகிறது. ஏமாறும் மக்கள் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.


தமிழ்வேள்
பிப் 25, 2025 22:52

விபூதி ருத்ராட்சம் திருப்புகழ் வைத்து வழிபாடு செய்த போது திருப்பரங்குன்றம் பிரச்சினை வெளியே வந்து ஹிந்து ஜனங்களை ஓரளவு ஒன்று சேரும் வாய்ப்புகள் வந்தன...தற்போது வைக்கோல் வைக்கப்பட்டுள்ளது.. கூடிய விரைவில் திராவிடம் வைக்கோல் அடைக்கப்பட்ட பொம்மை போல ஆகி இறுதியில் கொளுத்தி சாம்பல் ஆகி ஒன்றுமில்லாமல் போய் விடும் என்று முருகப்பெருமான் உணர்த்துகிறார் போலும்.


Bye Pass
பிப் 25, 2025 21:07

திராவிட ஆட்சியாளர்கள் விரைவில் வைக்கோல் உண்ணும் நிலைமைக்கு வருவார்கள் ..


Arunkumar,Ramnad
பிப் 25, 2025 19:03

இதிலிருந்து என்ன தெரிகிறது இந்த அராஜக ஆட்சி நடத்தும் அப்பாவுக்கு கேடு நெருங்கி கொண்டு இருக்கிறது என்று அந்த காலபைரவரான சிவன் சாபமிட்டு இருக்கிறார். கர்மாவை அனுபவிக்கும் நேரம் நெருங்கி கொண்டு இருக்கிறது.


கண்ணன்,மேலூர்
பிப் 25, 2025 18:58

வைக்கோல் வைக்க உத்தரவு என்றால் என்றால் என்ன அர்த்தம் இந்த திராவிட மாடல் ஆட்சி வைக்கோல் போரில் தொலைந்து விட்ட ஊசி போல காணாமல் போகப் போகிறது என்று அர்த்தம். மேலும் திருட்டு திராவிடம் வைக்கோல் தீ பிடிப்பது போல் அழிந்து சாம்பலாகப் போகிறது என்று அந்த சிவன் சாபமிட்டு இருக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை