உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார் உழவாரப்பணி

ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார் உழவாரப்பணி

திருப்பூர், : திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், கும்பாபிேஷக 9ம் ஆண்டு விழா, ஏப்., 6ம் தேதி நடக்கிறது. அன்று காலை, விஸ்வேஸ்வர சுவாமிக்கு, 108 சங்காபிேஷகம், சண்முகர் மற்றும் விசாலாட்சி அம்மனுக்கு நவகலச அபிேஷகம் நடக்கிறது. காலை, 11:30 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், தீபாராதனையும் நடைபெறும். இதையொட்டி, திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், கோவிலில் நேற்று உழவாரப்பணி நடந்தது. கொடிமரம், தோரண வாயில், ராஜகோபுரம் மற்றும் விமானங்கள், மகா மண்டபம், அறுபத்து மூவர் கல்மண்டபம், வசந்த மண்டபம் என, வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அறுபது பெண்கள் உட்பட, 150க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை