மேலும் செய்திகள்
அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
27-Sep-2025
அவிநாசி; முத்துசெட்டிபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மா.கம்யூ., சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அவிநாசி நகராட்சி, 9வது வார்டு முத்துச்செட்டிபாளையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடம் அமைக்கவும், பொது கழிப்பிடத்தில் மராமத்து பராமரிப்புபணிகள் மேற்கொள்ளவும், மின்விளக்கு கள் கூடுதலாக அமைத்து தரவும், கால்நடைமருத்துவமனை முதல் சேவூர் ரோடு வரை உள்ள வேகத்தடைகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் ரிப்லெக்டர் வைக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மா.கம்யூ., கிளை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி, உறுப்பினர்கள் பழனிசாமி, சண்முகம், தேவி மற்றும் சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கனகராஜ், பொது தொழிலாளர் சங்க செயலாளர் ராஜன், மாதர் சங்க ஒன்றிய தலைவர் சித்ரா, வடிவேல் உட்பட பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
27-Sep-2025